நாகை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தை ஆக்கிரமிக்க முயற்சி

காவல் நிலையத்தில் இரு தரப்பினரும் பேசியதால் உடன்பாடு;

Update: 2025-03-01 11:03 GMT
நாகை மாவட்ட, நகர காங்கிரஸ் கமிட்டி அலுவலகம் நீலா வடக்கு வீதியில் அமைந்துள்ளது. அதன் பின்புற சுவரை சிலர் இடித்ததுடன், ஆக்கிரமிக்கவும் முயன்றனர். இதுகுறித்து தகவலறிந்த, நாகை மாவட்ட மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் வழக்கறிஞர் ஆர்.என்.அமிர்தராஜா தலைமையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநிலச் செயலாளர் ஏ.ஆர்.நௌஷாத் முன்னிலையில், காவல்துறையில் புகார் மனு கொடுக்கப்பட்டது. பின்னர், நாகை நகர காவல் நிலையத்தில் பேசி முடிக்கப்பட்டது. நாகை மாவட்ட, நகர காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் யாரும் எவ்வித ஆக்கிரமிப்பும் செய்யக்கூடாது. அடிமனை நகர காங்கிரஸ் கமிட்டி பெயரில் உள்ளதால், அதில் யாருடைய தலையீடும், உரிமையுமின்றி இன்றி நகர காங்கிரஸ் கமிட்டி பெயரில் செயல்படும். ஆக்கிரமித்தவர்கள் எழுத்துபூர்வமாக, இடத்தை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகத்திடம் ஒப்படைத்து விட்டதால், எழுத்து பூர்வமான உடன்பாடு ஏற்பட்டது. நிகழ்ச்சியில், மாவட்ட துணை தலைவர் வீ.ராமலிங்கம், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ஓ.ஜி.வரதராஜன், மாவட்ட துணைத் தலைவர் ராஜிக் ஹூசைன், இளைஞர் காங்கிரஸ் மாவட்டத் தலைவர் யூசுப் மாலிம், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி எஸ்.சி துறைத் தலைவர் ஜே.கே.டி.ராஜ்குமார், மாவட்ட பொதுச் செயலாளர் ஏ.அகமது ரியாஸ், நாகூர் நகர தலைவர் சர்புதீன் மறைக்காயர், சந்தான மாரிமுத்து மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Similar News