தென்தாமரைக் குளத்தில் மு. க. ஸ்டாலின் பிறந்தநாள் விழா

கன்னியாகுமரி;

Update: 2025-03-01 12:19 GMT
தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் பிறந்த நாள் விழா இன்று நடைபெற்றது.  இதையொட்டி காலை கன்னியாகுமரி அருகே தென்தாமரைகுளம் பேரூர் திமுக சார்பில் பேரூர் செயலாளரும் 7-வது வார்டு கவுன்சிலருமான பூவியூர் காமராஜ் தலைமையில்   பட்டாசு வெடித்து ,இனிப்புகள் வழங்கி, பிறந்த நாள் உறுதிமொழி ஏற்று கொள்ளப்பட்டது.       இந்நிகழ்ச்சியில் தெற்கு ஒன்றிய செயலாளர் பி. பாபு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.  தலைமை செயற்குழு உறுப்பினர் ஆர். எஸ். பார்த்தசாரதி, பேராசிரியர் டி.சி. மகேஷ், ஒன்றிய பொருளாளர் எட்வின் ராஜ், ஒன்றிய பிரதிநிதி ஜாண் கிறிஸ்டோபர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.        விழாவில் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கிளைச் செயலாளர் மற்றும் திமுக நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.

Similar News