புழல் சிறையின் விசாரணை கைதி உடல்நலக்குறைவால் உயிரிழப்பு
புழல் சிறையின் விசாரணை கைதி உடல்நலக்குறைவால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழப்பு;
புழல் சிறையின் விசாரணை கைதி உடல்நலக்குறைவால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழப்பு. உணவு தாமதமாக கொடுத்ததால் மனைவியை கொலை செய்து சிறையில் அடைக்கப்பட்ட மாற்றுத்திறனாளி முதியவர் உயிரிழப்பு. சென்னை திருமுல்லைவாயல் சேர்ந்த மாற்றுத்திறனாளி முதியவர் விநாயகம் (72) கடந்த 20ஆம் தேதி உணவு தாமதமாக கொடுத்ததால் ஆத்திரத்தில் தமது மனைவி தனலட்சுமியின் (60) கழுத்தை அறுத்து கொலை செய்தார். இதனையடுத்து திருமுல்லைவாயல் போலீசார் முதியவர் விநாயகத்தை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். வயது மூப்பு மற்றும் உடல்நல குறைவு காரணமாக புழல் விசாரணை சிறையில் அடைக்கப்பட்டிருந்த விநாயகம் இன்று காலை சிறையில் மயங்கியுள்ளார். இதனையடுத்து சிறை மருத்துவமனையில் முதலுதவி அளித்து மேல்சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து உடற்கூறு ஆய்விற்காக ஸ்டான்லி மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து சிறை அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் புழல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.