ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாள் அதிமுக பொதுக்குழு கூட்டம்
தமிழக பெண்கள் முதியவர்கள் பாதுகாப்பாக நிம்மதியாக இருக்கவும் போலீசார் ஹீரோவாக மாற அதிமுகவிற்கு வாக்களிக்க வேண்டும்;
திருள்ளூர் தமிழகத்தின் வளர்ச்சியும் பெண்களின் வளர்ச்சியும் ஜீரோவாக உள்ளது 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ஸ்டாலினுக்கு மக்கள் 0 சீட்டு வழங்க வேண்டும் தமிழக பெண்கள் முதியவர்கள் பாதுகாப்பாக நிம்மதியாக இருக்கவும் போலீசார் ஹீரோவாக மாற அதிமுகவிற்கு வாக்களிக்க வேண்டும் நீட் ரகசியம் முதல் உதயநிதி ஸ்டாலின் வீட்டு ரகசியம் வரை மேடையில் பேசலாம் வருகிறீர்களா என அதிமுக கழக கொள்கை பரப்பு துணை செயலாளர் நடிகை விந்தியா பொதுக்கூட்டத்தில் சவால் விடுத்தார் முன்னால் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 77 வது பிறந்தநாளை முன்னிட்டு திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பொதுகூட்டம இன்று பொன்னேரியில் மாவட்ட கழக செயலாளர் பலராமன் தலைமையில் நடைபெற்றது இதில் அதிமுக செய்தி தொடர்பாளர் முன்னாள் அமைச்சர் பொன்னையன் அதிமுக கழக கொள்கை பரப்பு துணை செயலாளர் நடிகை விந்தியா ஆகியோர் கலந்து கொண்டு தையல் இயந்திரம் புத்தாடை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை பொதுமக்களுக்கு வழங்கினர் பின்னர் பொது கூட்டத்தில் பேசிய நடிகை விந்தியா சூறாவளி புயல்கள் திடீரென உருவாவதைப் போல தமிழகத்தில் திடீர் அப்பாவாக முதல்வர் ஸ்டாலின் உருவாகியுள்ளார் முதல்வர் ஸ்டாலின் திடீர் சாதனையாக அப்பாவாகி உள்ளார் என்றும் மக்கள் மனதார அம்மா என கூப்பிட்டால் அது பட்டம் மந்திரிகளை வைத்துக்கொண்டு அப்பா என கூப்பிட வைத்தால் அது மட்டம் அதிமுகவை அசைக்கவும் ஒழிக்கவும் முடியாது முதல்வர் ஸ்டாலினையும் அம்மா ஜெயலலிதாவையும் ஒப்பிட முடியுமா என்றும் கஞ்சா கள்ளச்சாராயம் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை முதல்வர் ஸ்டாலின் எப்படி அப்பாவாக முடியும் எத்தனை நாளைக்கு தமிழர் வேஷம் முதல்வர் ஸ்டாலின் போடுவார் என்றும் தமிழ்நாட்டில் அதிமுக இல்லாமல் அரசியல் இல்லை அதிமுகவை அசைக்கவோ அழிக்கவோ ஒழிக்கவோ முடியாது என்றும் எத்தனை நாளைக்கு பொய்களை பேசி தமிழ்நாட்டு மக்களை ஏமாற்ற நினைக்கிறார்கள் தமிழ்நாட்டு மக்களை திசை திருப்ப இந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்துகிறார்கள் இந்தியை எதிர்க்கிறோம் எனக் கூறும் முதல்வர் ஸ்டாலின் தமிழ் மொழியை வளர்க்கிறோம் என பேச முடியுமா என்றும் ரயில்வே நிலையங்களில் உள்ள ஹிந்தியை பிறகு அழிக்கலாம் அரசு டாஸ்மாக் மதுபான கடையில் உள்ள ஹிந்தி பெயரை அழிக்க முடியுமா உங்களால் அதற்கு துப்பு இல்லை என்றும் யாருடா அந்தப் பையன் நான் தான்டா அந்த பையன் என்கிற பாணியில் பாலியல் வன்கொடுமை பிரியாணி கடை சண்டை வெட்டி கொலை செய்பவர்கள் திருட்டுப் போன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் திமுக நபர்களே ஈடுபடுகின்றனர் என்றும் மக்கள் போராட்டம் உணவுக்கு போராட்டம் உரிமைக்கு போராட்டம் வேலைக்கு போராட்டம் ஊதியத்திற்கு போராட்டம் பென்சனுக்கு போராட்டம் குடி தண்ணிக்காக போராட்டம் எல்லா உரிமைகளுக்காக போராடிக் கொண்டிருக்கின்றனர் தமிழக மக்களின் உரிமைகளை காப்பாற்றுவோம் என ஏமாற்றி ஆட்சிக்கு வந்த முதல்வர் ஸ்டாலின் போராட்டத்திற்கும் கைகொடுப்பதில்லை போராட்டத்திற்கு அனுமதியும் அவர் தருவதில்லை என்றும் ஆளுநர் வீட்டு வாசல் முன்பாக போராடுவார்கள் ரயில் நிலையங்களில் ஹிந்தி எதிர்ப்புக்காக போராடுவார்கள் பைசாவிற்கு பிரயோஜனம் இல்லாத விஷயங்களுக்கு போராடுவார்கள் இனியும் மக்கள் ஏமாற மாட்டார்கள் என்பதை திமுகவிற்கு நிரூபிக்க வேண்டும் விளம்பரம் கொடுத்து ஏமாற்ற திமுகவினர் நினைக்கின்றனர் பொன்னேரிக்கு வருகை தரவுள்ள உதயநிதி ஸ்டாலின் எய்ம்ஸ் செங்கல்லோடு வருகிறாரா என பார்ப்போம் தேர்தலுக்கு மட்டும் தான் அவர் செங்கல் கொண்டு வருவார் ஆறு இடங்களில் புதிதாக மருத்துவக் கல்லூரி கொண்டு வருகிறோம் என வாக்குறுதி கொடுத்த சுகாதாரத்துறை அமைச்சர் எய்ம்ஸ் உள்ளிட்ட மருத்துவமனைகளுக்கு இனி உதயநிதி ஸ்டாலின் பாண்டில் ஏழு செங்கல்லை வைத்து தலையில் சுமந்து வர வேண்டும் அவர் பல கலர் மாற்றிக் கொள்ளும் பச்சோந்தி என்றும் உதயநிதிக்கு சவால் விடுகிறேன் நீட் ரகசியம் முதல் அவரின் வீட்டு ரகசியம் வரை மேடையில் பேசலாம் வருகிறீர்களா உங்களிடம் விவாதிக்க எடப்பாடியார் தேவையில்லை நானே போதும் ஆனால் உதயநிதி வரமாட்டார் என்றும் எம்ஜிஆரும ஜெயலலிதாவும் நடிகர்கள்தான் ஆனால் அரசியலுக்கு வந்த பிறகு அவர்கள் நடிப்பதை விட்டு விட்டனர் ஆனால் ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின் இருவரும் அரசியலுக்கு வந்த பிறகுதான் அதிகமாக நடிக்கிறார்கள் இவர்களின் நடிப்பு இனி செல்லுபடி ஆகாது தமிழ்நாட்டின் வளர்ச்சி ஜீரோ என்றும் கடந்த நான்கு வருடங்களில் பெண்களுக்கு எதிரானா குற்றசம்பவங்களில் போக்சோ வழக்குகள் மட்டும் 20,000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் தமிழ்நாட்டில் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பாலியல் தொல்லையால் பாதிக்கப்படுகின்றன தமிழ்நாட்டில் பெண்களின் வளர்ச்சி ஜீரோவாக உள்ளது திமுக ஆட்சியின் ஆராஜகம் திமுக பிரமுகர் நேரடியாக அனைவரின் முன்னிலையில் மிரட்டும் தோனியில் பேசுகிறார் அவரை கண்டிக்க முடியாமல் கைது செய்ய முடியாது முதல்வர் ஸ்டாலின் பொம்மை முதல்வராக உள்ளார் காவல்துறையினர் அவரை கைது செய்ய வேண்டாமா ஏன் வேடிக்கை பார்க்கிறார்கள் அதற்கு எதற்கு அவர்களுக்கு காக்கி சட்டை திமுகவின் கரைவேட்டிக் கட்டிக்கொண்டு அவர்கள் திமுகவிற்கு வேலை செய்யலாமே மக்களே திமுகவை நம்பாதீர்கள் மக்களை ஆடுகளாக பார்க்கும் திமுகவிற்கு பாடம் புகட்ட வேண்டும் மக்கள் சிங்கம் என்று நிரூபிக்க வேண்டும் முதல்வர் ஸ்டாலினுக்கு ஜீரோ சீட்டை பரிசாக அளிக்க வேண்டும் போலி விளம்பரம் பொய்யான வாக்குறுதி கொடுத்து ஏமாற்றியது திமுக என்றும் தமிழக பெண்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் முதியவர்கள் நிம்மதியாக இருக்கவும் தமிழக போலீசார் ஹீரோவாக இருக்க வேண்டுமென்றால் இரட்டை இலைக்கு வாக்களிக்க வேண்டும் என அவர். கேட்டுக்கொண்டார்