கலவை அருகே சிறுமியின் திருமணம் தடுத்து நிறுத்து!
சிறுமியின் திருமணம் தடுத்து நிறுத்தம்;
கலவை பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி காணவில்லை என அவரது தந்தை இரு நாட்களுக்கு முன்பு போலீசில் புகார் அளித்தார். இதுகுறித்து கலவை போலீசார் விசாரித்து வந்த நிலையில், வாலிபர் ஒருவருடன் சிறுமிக்கு திருமணம் நடக்க இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் சிறுமியையும் அந்த வாலிபரையும் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து விசாரித்தனர். பின்னர் சிறுமியை வாலாஜா காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர்.