சஹர் நேரத்தில் தீன் இசை பாடல்கள் மூலம் அனைத்து தெருக்களிலும் தீன் பரப்பும் சஹர் பாவாக்களுக்கு
நாகூர் முஸ்லிம் ஜமாத் சார்பில் அன்பளிப்பு - சால்வை அணிவித்து கௌரவிப்பு;
நாகை மாவட்டம் நாகூர் ஆண்டவர் தர்காவில், ரமலான் மாதம் முழுவதும் சஹர் நேரத்தில் தீன் இசை பாடல்கள் மூலம் அனைத்து தெருக்களிலும் சென்று தீன் பரப்பும் சஹர் பாவாக்களை கௌரவிக்கும் நிகழ்ச்சி, நாகூர் முஸ்லீம் ஜமாத் சார்பில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில், சஹர் பாவாக்களுக்கு சால்வை அணிவித்து கௌரவித்து, நாகூர் எஜமானின் தர்பாரின் கால்மாட்டு வாசலில் இருந்து தொடங்கி வைக்கப்பட்டது. நிகழ்ச்சியில், நாகூர் முஸ்லீம் ஜமாஅத் செயலாளரும், நாகூர் தர்கா ஆலோசனை குழு உறுப்பினருமானஅபுல் காசிம் சாஹிப், நாகூர் கௌதியா சங்க முன்னாள் துணை செயலாளரும், ஏழு லெப்பை ஜாமீஆ மஸ்ஜித்தின் முன்னாள் முத்தவள்ளியுமான செய்யது அலி நெய்னா, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநிலச் செயலாளர் நௌஷாத், சாகிப்மார்கள் முன்னேற்ற சங்க செயலாளர் யூசுப் மௌலானா, செய்யது பள்ளி ஜாமியா மஸ்ஜித் செயற்குழு உறுப்பினர் ஜலாலுதீன், நாகூர் சித்திக் சேவைக் குழுமம் தர்ம அறக்கட்டளை நிர்வாகியும், கௌதியா சங்க செயற்குழு உறுப்பினருமானமுகம்மது இத்ரீஸ் மரைக்காயர் ஆகியோர் சஹர் பாவாக்களுக்கு அன்பளிப்பு மற்றும் சால்வை அணிவித்து கௌரவித்தனர்.