உடல் நலம் பாதிக்கப்பட்ட அதிமுக மூத்த தொண்டரை நேரில் சந்தித்து நலம் விசாரித்து முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் நிதி உதவி வழங்கினார்

உடல் நலம் பாதிக்கப்பட்ட அதிமுக மூத்த தொண்டரை நேரில் சந்தித்து நலம் விசாரித்து முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் நிதி உதவி வழங்கினார்;

Update: 2025-03-02 07:16 GMT
விருதுநகரில் உடல் நலம் பாதிக்கப்பட்ட அதிமுக மூத்த தொண்டரை நேரில் சந்தித்து நலம் விசாரித்து முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் நிதி உதவி வழங்கினார்.. விருதுநகர் கூரைகுண்டு பகுதியில் வசித்து வருபவர் எம்ஜிஆர் என்கிற பிச்சை. இவர் அதிமுகவின் ஆரம்ப காலத் தொண்டர். மேலும் எம்ஜிஆரின் தீவிர ரசிகர். இந்நிலையில் பிச்சை கடந்த சில உடல் நலம் பாதிப்படைந்து வீட்டில் இருந்து வருகிறார். இந்நிலையில் உடல் நலக் குறைவால் பாதிப்படைந்துள்ள மூத்த தொண்டர் பிச்சை அவர்களை முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அவரது இல்லத்திற்க்கு சென்று உடல்நலம் விசாரித்து கழக பொது செயலாளர் புரட்சித்தமிழர் எடப்பாடியார் சார்பாக நிதி உதவி வழங்கினார்.. இந்நிகழ்ச்சியில் ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டனர்..

Similar News