சேலம் கன்னங்குறிச்சியில் கஞ்சா வியாபாரி சிக்கினார்

போலீசார் நடவடிக்கை;

Update: 2025-03-02 07:57 GMT
கன்னங்குறிச்சி போலீஸ் சரகத்திற்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுகிறதா? என கன்னங்குறிச்சி போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நாமக்கல் மாவட்டம் புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 20) என்பவர் கன்னங்குறிச்சி பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வருவது தெரியவந்தது. இதையடுத்து கார்த்தியை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது

Similar News