மருங்கூர் கடைத் தெருவில் அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர்
ஜெயலலிதாவின் 77-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்;
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் மருங்கூர் கடைத்தெருவில், அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு, கட்சியின் தெற்கு ஒன்றிய செயலாளர் பக்கிரிசாமி தலைமை வகித்தார். நாகை நகர செயலாளர் தங்க.கதிரவன், ஒன்றிய துணை செயலாளர் திருமேனி, திட்டச்சேரி நகர செயலாளர் அப்துல் பாசித் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வடக்கு ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் வரவேற்றார். கூட்டத்தில், மாவட்ட செயலாளர் எம்எல்ஏ ஓ.எஸ்.மணியன், கழக அமைப்பு செயலாளர்கள் வளர்மதி, ஆசைமணி ஆகியோர் கலந்து கொண்டு, வர இருக்கிற சட்டமன்ற தேர்தலில், அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்வது, அதிமுக அரசு செய்த சாதனைகளை மக்களிடையே கொண்டு சேர்த்து வாக்குகள் பெறுவது குறித்து பேசினர். கூட்டத்தில், ஜெயலலிதா பேரவை ஒன்றிய செயலாளர் ராஜேஷ்குமார், மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு பொருளாளர் நடராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில், ஒன்றிய அவைத் தலைவர் கலியபெருமாள் நன்றி கூறினார்.