திருத்தணி முருகன் கோயிலில் போக்குவரத்து நெரிசலால் பக்தர்களாவது
திருத்தணி சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் இன்று சாமி தரிசனம் செய்ய திரண்ட பக்தர்கள் மலைக்கோவிலில் முதல் மலை அடிவாரம் வரை கடும் போக்குவரத்து நெரிசல் போக்குவரத்து போலீசார் போதிய நடவடிக்கை எடுக்கவில்லை திருக்கோயில் நிர்வாகம் பக்தர்கள் போக்குவரத்து வசதிக்கு கூடுதல் பேருந்துகளை கோயில் சார்பில் இயக்கவில்லை;
திருத்தணி சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் இன்று சாமி தரிசனம் செய்ய திரண்ட பக்தர்கள் மலைக்கோவிலில் முதல் மலை அடிவாரம் வரை கடும் போக்குவரத்து நெரிசல் போக்குவரத்து போலீசார் போதிய நடவடிக்கை எடுக்கவில்லை திருக்கோயில் நிர்வாகம் பக்தர்கள் போக்குவரத்து வசதிக்கு கூடுதல் பேருந்துகளை கோயில் சார்பில் இயக்கவில்லை என்று பக்தர்கள் குற்றச்சாட்டு திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற ஐந்தாம் படை திருக்கோயிலாகும் இந்த திருக்கோயிலில் இன்று ஞாயிற்றுக்கிழமை பொது விடுமுறை தினத்தில் சாமி தரிசனம் செய்ய தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மற்றும் அண்டை மாநிலமான:- ஆந்திர மாநிலம், கர்நாடக மாநிலம், தெலுங்கானா மாநிலம், போன்ற பகுதிகளிலிருந்து அதிகளவு பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு மாலை கோவில் திரண்டு உள்ளனர் மேலும் இன்று சுப முகூர்த்த தினம் என்பதால் அதிகளவு மலைக்கோயில் திருமணங்களும் நடைபெற்றது இந்த திருமணங்களுக்கு வந்தவர்களும் மற்றும் மலை கோவிலுக்கு சாமி தரிசனத்திற்கு வந்தவங்களும் தங்கள் வாகனங்களில் மலைக் கோவிலில் வந்ததால் மலைக்கோவில் முதல் மலை அடிவாரம் வரை இரண்டு கிலோமீட்டர் தூரம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது போதிய முன்னேற்பாடுகளை திருக்கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்யவில்லை மேலும் பக்தர்கள் மலை மீது மலை அடிவாரம் வரை மற்றும் ரயில் நிலையம் வரை செல்வதற்கு கூடுதல் பேருந்து வசதிகளை திருக்கோயில் நிர்வாகம் செய்யவில்லை மேலும் போக்குவரத்து போலீசார் கடமைக்கு தங்கள் பணிகளை செய்வதாகும் மேலும் போக்குவரத்து போலீஸ் அதிகாரிகள் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு இருந்தாலும் வேடிக்கை பார்க்கும் நிலையில் மட்டுமே உள்ளனர் போதிய நடவடிக்கைகளை எடுக்க போக்குவரத்து போலீஸ் அதிகாரிகள் முன்வரவில்லை போலீஸ் இருந்தும் ஏன் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது இதற்கு நிரந்தர தீர்வு இல்லையா கோயிலுக்கு தரிசனத்திற்கு வரும் முருக பக்தர்கள் கேள்வி?? எழுப்பி உள்ளனர் நிரந்தர தீர்வு ஏற்படுத்த இந்து சமய அறநிலைத்துறைக்கு முருக பக்தர்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.