நான் ஆட்சியில் இருந்தால் பாலியல் வன்கொடுமை செய்பவர்களை அந்த இடத்தை வெட்டி விடுவேன் : அன்புமணி ராமதாஸ்

நான் ஆட்சியில் இருந்தால் பாலியல் வன்கொடுமை செய்பவர்களை அந்த இடத்தை வெட்டி விடுவேன் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் திருத்தணியில் ஆவேச பேச்சு;

Update: 2025-03-02 15:06 GMT
நான் ஆட்சியில் இருந்தால் பாலியல் வன்கொடுமை செய்பவர்களை அந்த இடத்தை வெட்டி விடுவேன் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் திருத்தணியில் ஆவேச பேச்சு. திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டையில் பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகியின் இல்லத் திருமண வரவேற்பு நிகழ்வில் கலந்து கொள்வதற்கு மணமக்களை வாழ்த்த வருகை தந்தார் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் முன்னதாக அவருக்கு திருத்தணி நகராட்சியில் கேரள சண்டி மேளம், மிகப்பெரிய ரோஜா மாலை கிரேன் மூலமாக அன்புமணி ராமதாஸிற்கு மாலை அணிவிக்கப்பட்டது இதனைத் தொடர்ந்து பூரண கும்ப மரியாதை மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது இதனைத் தொடர்ந்து கூடியிருந்த பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகளிடையே உரையாற்றிய அன்புமணி ராமதாஸ் பேசுகையில் திருத்தணி நகரில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி பாட்டாளி மக்கள் கட்சிக்கு 35 ஆண்டு காலம் வரலாறு உள்ளது தமிழகத்திற்கு மட்டுமல்ல இந்தியாவிற்கே நாம் பல சாதனைகளை செய்திருக்கிறோம் வேறு எந்த கட்சியும் இதனை சொல்ல முடியாது தமிழகத்தில் தற்போது ஆண்டு கொண்டிருக்கும் திமுகவோ அல்லது ஆண்டு முடித்த அதிமுகவோ இதனை சொல்ல முடியாது ஆட்சிக்கு வருவதற்கு முன்பாகவே தமிழகத்தில் சமூக நீதி சாதனைகள் , விவசாய சாதனைகள், சுற்றுச்சூழல் சாதனைகள், கல்விக்கான சாதனைகள், செய்து இருக்கின்றோம் சென்னையிலே இன்று வேளாண்மை துறைக்கு என்று 18-வது நிதிநிலை அறிக்கை இன்று நான் வெளியிட்டேன், 18 ஆண்டுகாலமாக வேளாண்மைக்கு என்ன தேவை விவசாயிகளுக்கு என்ன தேவை, விவசாய முன்னேற்றத்திற்கு என்ன தேவை, என்பதை அரசாங்கம் வெளியிடுவதற்கு முன்பாக, பாட்டாளி மக்கள் கட்சி வெளியிட்டு வருகிறது, நான்காண்டுகளுக்கு முன்பு தமிழக அரசு வேளாண்மை துறைக்கு என்று தனி நிதிநிலை அறிக்கை வெளியிடுவோம் என்று முடிவு செய்துள்ளனர், இந்த முடிவுக்கு காரணம் யார் என்றால் பாட்டாளி மக்கள் கட்சி தான், தமிழகத்தில் கடந்த ஆண்டு விவசாயிகளுக்கு அரசு ஒதுக்கியது 14,500, கோடி, ஆனால் பாட்டாளி மக்கள் கட்சி இன்று நாம் வெளியிட்டுள்ள விவசாயிகளுக்கான பட்ஜெட்டில் 85 ஆயிரம் கோடி, ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது பாட்டாளி மக்கள் கட்சி தமிழகத்தை ஆளுகின்ற கட்சியாக இருந்தால் விவசாயத்திற்கு மட்டும் 85 ஆயிரம் கோடியாக இருக்கும் , இதில் நீர்ப்பாசனத்திற்கு மட்டும் 20000 கோடி ஆகும் தமிழகத்தில் சட்டமும் கிடையாது சட்ட ஒழுங்கும் கிடையாது தமிழகத்தில் பெண்கள் எங்கும் பாதுகாப்பாக தனியாக செல்ல முடியாது, சூழல் உள்ளது ஐந்து வயது பெண் குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யும் நிகழ்வு உள்ளது இதனை என்ன செய்யலாம் என்று கூட்டத்தை பார்த்து கேட்ட அன்புமணி அவர்களை சாவடிக்க வேண்டும் என்று கூறிய பெண்கள் எட்டு பேர் சேர்ந்து ஒரு பெண் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்கின்றனர், ஏழு பேர் சேர்ந்து ஒரு கல்லூரி பெண்ணை கற்பழிப்பது, இதெல்லாம் நடப்பது பீகார், சத்தீஸ்கர், உத்தர பிரதேஷ், இல்லை இதெல்லாம் நடப்பது தமிழகத்தில், இதெல்லாம் தமிழகத்தில் நடக்கிறது இதெல்லாம் தமிழகத்தில் நடக்க விட முடியுமா? தமிழகத்தில் பயமில்லாமல், நான் மட்டும் ஆட்சியில் இருந்தால், வேற மாதிரி செய்திருக்க முடியும் அந்த நபர்களை அந்த இடத்தில் வெட்டி இருப்பேன் இப்படி செய்தால் வேறு யாராவது இதுபோல் சம்பவங்களில் ஈடுபடுவார்களா, அந்த பயம் வரவேண்டும் இவர்கள் வெட்டி விடுவார்கள் என்று பயம் வர வேண்டும், என்று ஆவேசமாக அன்புமணி பேசியனர் இந்த சம்பவங்கள் எல்லாம் ஏனென்று நடைபெறுகிறது தெரியுமா? தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் போதை மாத்திரைகள் விற்பனை நடைபெறுகிறது, கஞ்சா விற்பனை, மது விற்பனை நடைபெறுகிறது, இதற்கெல்லாம் காரணம் யார்? தெரியுமா முதலமைச்சர் ஸ்டாலின், குறிப்பாக இந்த சம்பவங்களில் பாதிக்கப்பட்டு இருப்பது பெண்கள் பாதுகாப்பு இல்லாமல் பெண்கள் எங்கும் செல்ல முடியவில்லை இதையெல்லாம் நீங்கள் அனைவரும் கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள் உங்களுக்கு யார் மாற்றத்தை கொண்டு வருவார்களோ அவர்களுக்கு நீங்கள் ஆதரவாளியுங்கள் இந்த ஆட்சியில் இங்கு யாரும் மகிழ்ச்சியாக இல்லை, மாணவர்கள் மகிழ்ச்சியாக இல்லை, விவசாயிகள் மகிழ்ச்சியாக இல்லை, பெண்கள் மகிழ்ச்சியாக இல்லை, நெசவாளர்கள் மகிழ்ச்சியாக இல்லை, அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியாக இல்லை, இதிலிருந்து தெரிவது இந்த ஆட்சியில் யாரும் மகிழ்ச்சியாக இல்லை இவர்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று கூறினார்கள் ரத்து செய்தார்களா என்று கூட்டத்தை பார்த்து கேள்வி? எழுப்பிய அன்புமணி.. இந்நிகழ்ச்சி நடைபெற்ற 30 நிமிடத்திற்கு மேலாக இந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது இதனால் வாகன ஓட்டிகள் மிக நீண்ட தூரம் வாகனங்களை நிறுத்தி வைத்து மாநில நெடுஞ்சாலையில் காத்திருந்தனர் சொற்பாலவே போலீசார் இருந்ததால் இந்த பகுதியை போக்குவரத்து நெரிசல் இல்லாமல் வாகனங்களை கடந்து செல்ல முடியாமல் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் மிகவும் சிரமம் அடைந்தனர் பாட்டாளி மக்கள் கட்சியின் இந்த சாலையோர நிகழ்ச்சி காரணமாக பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.

Similar News