நடிகை விஜயலட்சுமிக்கு ஆதரவாக வீரலட்சுமி பரபரப்பு வீடியோ வெளியிட்டுள்ளார்

நடிகை விஜயலட்சுமிக்கு ஆதரவாக போராடுவேன் தமிழ்நாட்டில் உள்ள ஒட்டுமொத்த பெண் தலைவர்களும் அணி திரள போகிறோம்: நடிகை விஜயலட்சுமி கர்ப்பப்பையை எடுக்க மருத்துவர்கள் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறி வீடியோ வெளியிட்டு மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்;

Update: 2025-03-02 15:22 GMT
நடிகை விஜயலட்சுமிக்கு ஆதரவாக போராடுவேன் தமிழ்நாட்டில் உள்ள ஒட்டுமொத்த பெண் தலைவர்களும் அணி திரள போகிறோம்: நடிகை விஜயலட்சுமி கர்ப்பப்பையை எடுக்க மருத்துவர்கள் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறி வீடியோ வெளியிட்டு மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் சீமானுக்கு எதிராக தமிழர் முன்னேற்றபடை கட்சி தலைவி வீரலட்சுமி வீடியோ வெளியிட்டு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார் . சீமான் விவகாரத்தில் நடிகை விஜயலட்சுமிக்கு ஏழு முறை கருக்கலைப்பு நடந்ததால் அவருடைய கர்ப்பப்பை அகற்ற வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்ததாக தன்னிடம் நடிகை விஜயலட்சுமி கூறியது அதிர்ச்சியையும் மன உளைச்சலையும் ஏற்படுத்தி உள்ளது என தமிழர் முன்னேற்றப்படை கட்சித் தலைவி வீரலட்சுமி பரபரப்பு வீடியோ வெளியிட்டு அதிர்ச்சி உள்ளார். அதில்,என் தாய் தமிழ் நாட்டு மக்களுக்கு வணக்கம் நடிகை விஜயலட்சுமி அக்கா அவர்கள் என்னை தொடர்பு கொண்டு பேசினார்கள் முன்னர் பேசியதற்கு வருத்தம் தெரிவித்ததுடன் இந்த விவகாரத்தில் நாம் இருவரும் இணைந்து செயல்படுவோம் என்றார் அதற்கு நான் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எப்பொழுதும் இந்த வீரலட்சுமி துணை நிற்பேன் என்றும் அதன் அடிப்படையில் தமிழக முன்னேற்ற படையும் நானும் உதவுவோம் என்று தெரிவித்தேன் அவர் பேசியபோது அதிர்ச்சியான தகவல் ஒன்றை தெரிவித்தார் அது மன அழுத்தத்தை தரும் விதமாகவும் இருந்தது சீமான் அவர்களால் ஏழுமுறை கருகலைப்பு செய்ததால் மருத்துவமனையில் கர்ப்பப்பை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியதுடன் கர்ப்பப்பை அகற்ற வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாக கூறினார் என்ற அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார் இதை கேட்டதும் தனக்கு அதிர்ச்சி ஏற்பட்டு மன அழுத்தம் உருவானது என்றார் இந்த விவகாரத்தில் நாம் ஆரம்பத்தில் போராடிய போது புகார் தந்தபோது உதவிட யாரும் முன் வந்து நிற்கவில்லை ஆனால் நிச்சயம் தமிழகத்தில் உள்ள மக்களும் தலைவர்களும் அரணாக நிற்பார்கள் என்று கூறினேன். கனிமொழி எம்பி அவர்களும் கும்முடிபூண்டியைச் சேர்ந்த எம்பி சுதா (மயிலாடுதுறை) ஆகியோரும் ஏற்கனவே குரல் கொடுத்துள்ளனர் நடிகை விஜயலட்சுமிக்கு ஆதரவாக நிற்பவர்கள் பெண்மையை போற்றுபவர்கள் பெண்மையை மதிப்பவர்கள் கற்பென்றால் என்ன என்று தெரிந்தவர்களால் விஜயலட்சுமிக்கு ஆதரவாக நிற்கின்றனர் இது மூன்றும் என்னவென்று தெரியாதவர்கள் தான் சீமான் உடன் நிற்கின்றனர் விஜயலட்சுமிக்கு கண்டிப்பாக நீதி கிடைக்கும் அந்த நீதி விரைவாக கிடைக்க தமிழர் முன்னேற்ற படை உதவும் இதற்காக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதம் இருக்க ஏற்பாடு செய்துள்ளோம் என்று தமிழர் முன்னேற்ற படை கட்சி தலைவி வீரலட்சுமி பேசி அதிர்ச்சி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Similar News