முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன
மாணவர்களுக்கு கொடுக்கின்ற உணவில் ஊழல் செய்யும் அரசாங்கம் திமுக அரசாங்கம், அதிமுக கொண்டு வந்த அனைத்து நல்ல திட்டங்களையும் நிறுத்தியது திமுக அரசு விருதுநகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பேச்சு..;
மாணவர்களுக்கு கொடுக்கின்ற உணவில் ஊழல் செய்யும் அரசாங்கம் திமுக அரசாங்கம், அதிமுக கொண்டு வந்த அனைத்து நல்ல திட்டங்களையும் நிறுத்தியது திமுக அரசு விருதுநகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பேச்சு.. விருதுநகர் முத்துராமன்பட்டி பகுதியில் முன்னாள் முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு விருதுநகர் அதிமுக சார்பில் அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் மா.பா பாண்டியராஜன் கலந்துகொண்டு ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.. பின்னர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர், பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் காலை உணவில் ஊழல் செய்யும் அரசு திமுக அரசு, வரும் தேர்தலில் திமுகவிற்கு பொதுமக்கள் நல்ல பாடம் புகட்ட வேண்டும், மேலும் அதிமுக அரசு கொண்டுவந்த 18 திட்டங்களில் 16 திட்டங்களை திமுக அரசு நிறுத்தி உள்ளது. என தெரிவித்தார்.. இந்நிகழ்ச்சியில் அதிமுக கவுன்சிலர் பூசாரி சரவணன் நகரக் கழக துணை செயலாளர் பா. கண்ணன் உள்ளிட்ட ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டனர்...