வெங்கஞ்சி அரசுப்பள்ளியில் நூற்றாண்டு விழா

கன்னியாகுமரி;

Update: 2025-03-03 07:28 GMT
.குமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே வெங்கஞ்சி அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி  நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. முஞ்சிறை  வட்டார கல்வி அலுவலர் சஜலின் சுஜி தலைமை உரையாற்றினார். பள்ளி தலைமை ஆசிரியர் லீலாகுமாரி முன்னிலை வகித்தார். முன்னாள் பள்ளி மாணவியும்,  அமலாக்கத்துறை துணை இயக்குனருமாகிய சிமி ஜெயராஜ் சிறப்புரை ஆற்றினார். எழுத்தாளர் நாஞ்சில் உதயன் உட்பட பலர் கலந்து கொண்டு வாழ்த்து பேசினர். இந்த விழாவில் முன்னாள் தலைமை ஆசிரியர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

Similar News