சேலம் கந்தம்பட்டி பைபாஸ் மூலபிள்ளையார் கோவில் வண்டிக்காரன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள், தனியார் நிறுவன ஊழியர் சம்பவத்தன்று இரவு வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தியிருந்தார். மறுநாள் காலை வண்டி அங்கு இல்லாதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது. இது குறித்து அன்னதானபட்டி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.