சேலம் மாவட்டம் தாரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ். இவர் சேலம் பழைய பஸ்ஸ்டாண்ட் ஆட்டோ ஸ்டாண்ட் அருகே நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த மூன்று வாலிபர்கள் பிரகாசிடம் கத்தியை காட்டி மிரட்டி ஆயிரம் ரூபாயை பறித்துச் சென்றனர். இது குறித்த பிரகாஷ் டவுன் போலீசில் புகார் அளித்தார் போலீஸ் விசாரணை செய்து டவுன் பகுதியை சேர்ந்த முபாரக், அக்பர், ரிஷிகேஷ் ஆகியோர் பணம் பறித்தது தெரியவந்தது. இதனை அடுத்து அவர்களை போலீசார் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.