சவுடு மண் குவாரிக்கு எதிராக வீடுகளில் கருப்பு கொடியேற்றி போராட்டம்

ஊத்துகோட்டை அருகே அரசு சவுடு மண் குவாரி செயல்பட எதிர்ப்பு தெரிவித்து வீடுகளில் கருப்பு கொடி ஏற்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் வீட்டுமனை பட்டா வழங்கிடவும் குவாரியை தடுத்து நிறுத்த வேண்டுகோள் விடுத்தனர்.;

Update: 2025-03-03 13:50 GMT
திருவள்ளூர்: ஊத்துகோட்டை அருகே அரசு சவுடு மண் குவாரி செயல்பட எதிர்ப்பு தெரிவித்து வீடுகளில் கருப்பு கொடி ஏற்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் வீட்டுமனை பட்டா வழங்கிடவும் குவாரியை தடுத்து நிறுத்த வேண்டுகோள் விடுத்தனர். திருவள்ளூர் மாவட்டம் கரடிபுத்தூர் கிராமத்தை சுற்றியுள்ள 500க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு வீட்டுமனை பட்டா இல்லாததால் அரசு சார்பில் வீட்டுமனை பட்டா வழங்கவும் அங்கு செயல்டும் அரசு மண் குவாரியை மூடக்கோரி கடந்த 24 ஆம்தேதி முதல் பல்வேறு கட்டமாக போராட்டம் நடைபெற்று வந்த நிலையில் குவாரியை நிறுத்திடவு நடவடிக்கை மேற்கொள்வதாகவும் காவல்துறையினரை கிராமத்திற்கு விட்டு வெளியேற்றவும் நடவடிக்கை எடுப்பதாக பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்த பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் அவர்களிடம் உறுதியளித்தார் பொதுமக்கள் தங்களது வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி மண்குவாரி தொடர்ந்து செயல்பட அனுமதிக்க மாட்டோம் எனக்கூறி தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் இன்று மாலைக்குள் போராட்டம் முடிவுக்கு வரும் என சட்டமன்ற உறுப்பினர் அவர்களிடம் தெரிவித்தார். தொடர் போராட்டத்தின் போது பட்டாகேட்டு போராடிய தங்களை போலீசார் தாக்கி கடுமையாக கைது செய்ததாகவும் தெரிவித்த பொதுமக்கள் தங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கிடவும் மண்குவாரியை தடுத்து நிறுத்துங்கள் என அவரை கைகூப்பி பெண்கள் கேட்டுகொண்டனர். அப்போது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்வதாக உறுதியளித்தார்

Similar News