வாரந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது
வாரந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது;
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள்; கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனைப்பட்டா மற்றும் பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலை வாய்ப்பு, விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்டம் மற்றும் விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது. மேலும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்தகுடி மக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அமருமிடத்திற்குச் சென்று, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். இம்மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்கள். மேலும் முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடர்புடைய அலுவலர்களை அறிவுறுத்தினார்கள். இக்கூட்டத்தில், விருதுநகர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் பணியாற்றி பணிக்காலத்தில் மரணமடைந்த லேட் திரு.ராமசாமி என்பவரின் வாரிசுதாரருக்கும், கல்குறிச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பணியாற்றி பணிக்காலத்தில் மரணமடைந்த லேட் திரு.கே.சுரேஷ் என்பவரின் வாரிசுதாரருக்கும் கருணை அடிப்படையிலான பணிநியமன ஆணைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். பின்னர், மாவட்டத்தில் அருப்புக்கோட்டை மற்றும் இராஜபாளையம் வட்டாரங்களில் சுயஉதவிக்குழு கூட்டுறவு கடன் சங்கம் புதிதாக தொடங்குவதற்கான பதிவுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.