குமரி மாவட்டத்தில் பணிபுரியும் காவலர்களுக்கு பேருந்து பயண அட்டை 

நாகர்கோவில்;

Update: 2025-03-04 03:31 GMT
கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையில் பணிபுரியும் காவலர் முதல் ஆய்வாளர் வரை உள்ள நபர்களுக்கு அரசு பேருந்ததில் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளே மட்டும் இலவசமாக பயணம்   செய்ய உதவும் காவலர் இலவச பயண பேருந்து அட்டையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர். இரா.ஸ்டாலின் நேற்று வழங்கினார்.       இந்த பயண அட்டை குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும். குறிப்பிட்ட வருவாய் மாவட்டத்திற்கு மட்டுமே பயணம் செய்ய முடியும். பயண அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள நபர் புறநகர் பேருந்துகளில் மட்டும் பயணம் செய்ய அனுமதி உண்டு. அனைத்து ஏசி மற்றும் விரைவு போக்குவரத்து கழக போக்குவரத்துகளில் பயணிக்க இயலாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News