குமரியில் போலியாக கலெக்டர் கையொப்பமிட்டு பள்ளிகளில் வசூல் வேட்டை
வழக்கு பதிவு;
குமரி மாவட்டத்தில் எந்த வித அனுமதி இன்றி மாவட்ட கலெக்டர் பெயரில் போலி கடிதம் தயாரித்து செய்தி மக்கள் தொடர்பு துறை அதிகாரி அலுவலக முத்திரைகளை போலியாக பதிவிட்டு பள்ளி, கல்லூரிகளில் குழந்தைகள் திரைப்படத்தை திரையிட்டு காட்டி கட்டணம் வசூலித்தது அம்பலமாகியுள்ளது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குமரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜாண் ஜெகத் பிரைட் என்பவர் நேசமணி நகர் போலீசில் புகார் அளித்தார். மாணவர்களே மரம் வளர்ப்போம் என்ற தலைப்பில் குழந்தைகள் திரைப்படத்தை தயாரித்து நவம்பர் 2024 முதல் தற்போது வரை தொடர்ந்து எந்த அனுமதியும் இன்றி திரையிட்டதாக கூறப்படுகிறது. இந்தப் புகார் தொடர்பாக தற்போது நேசமணி நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து அரசு முத்திரையை போலியாக பயன்படுத்தப்பட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.