கல்லூரி மாணவி திடீர் மாயம் - போலீசில் புகார்

இரணியல்;

Update: 2025-03-04 04:04 GMT
குமரி மாவட்டம் இரணியல் அருகே கீழ கட்டிமாங்காடு பகுதி சேர்ந்தவர் செல்லதுரை (60). இவர் டெய்லர் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவர்களது இளைய மகள் அபிநயா (17). நாகர்கோவில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிஎஸ்சி முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.       சம்பவ தினம் காலை வழக்கம் போல் செல்லதுரை கடைக்கு சென்று விட்டார். இரவில் கடையை தனது வீட்டிற்கு சென்று பார்த்தபோது அபிநயாவை காணவில்லை. இதையடுத்து அவர் தனது மகளை பல இடங்களில் தேடினார். ஆனாலும் அவர் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.       தொடர்ந்து செல்லதுரை குளச்சல் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான கல்லூரி மாணவி அபிநயாவை தேடி வருகின்றனர்.

Similar News