குமரியில் பெண்களுக்கான சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் நாளை

கலெக்டர் அறிவிப்பு;

Update: 2025-03-04 05:39 GMT
குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-        குமரி மாவட்ட நிர்வாகம், நான் முதல்வன், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் தமிழ்நாடு தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் இணைந்து நடத்தும் பெண்களுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நாளை மார்ச் 5- ம் தேதி கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வைத்து நடைபெற இருக்கிறது.       இந்த வேலை வாய்ப்பு முகாமில் பத்துக்கு மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளன. டிப்ளமோ, பி இ  பயின்ற நபர்களை நிறுவனங்கள் தேர்ந்தெடுக்க உள்ளனர். சில நிறுவனங்கள் ஆன்லைன் தேர்வு நடத்த உள்ளதாகவும், இதற்கு வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொள்வார்கள் தயாராக வரவேண்டும்.       கலந்து கொள்பவர்கள் காலை 9 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அன்றைய தினம் அமைக்கப்பட்டுள்ள பதிவு மையத்தில் பதிவு செய்ய வேண்டும். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மாணவிகள் மற்றும் வேலை தேடுகின்ற இளைஞர்கள் கல்லூரி மாணவ மாணவிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News