விழுப்புரம் தேர்வு மையத்தில் ஆட்சியர் ஆய்வு

21 ஆயிரம் மாணவர்கள் விழுப்புரம் மாவட்டத்தில் தேர்வு எழுதினர்;

Update: 2025-03-04 10:29 GMT
விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முதல் பிளஸ் 2 தேர்வு துவங்கியது. 105 தேர்வு மையங்களில் 21 ஆயிரத்து 836 மாணவ, மாணவியர்கள் தேர்வு எழுதினர்.விழுப்புரம் திரு.வி.க., வீதியில் உள்ள அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தை கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் பார்வையிட்டார்.அப்போது சி.இ.ஓ., அறிவழகன், நேர்முக உதவியாளர் பெருமாள் உடனிருந்தனர்.தேர்வு மையங்களில், பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டிருந்தனர். அப்பகுதியில், தடையற்ற மின்சாரம், குடிநீர் வசதி உள்ளிட்டவை செய்யப்பட்டிருந்தன.

Similar News