தேனியில் காப்புக்காடுகளில் இரண்டு வகையான தீ தடுப்பு கோடுகள் அமைப்பு

காட்டுத்தீ;

Update: 2025-03-04 10:30 GMT
தேனி வனச்சரகம் மூலம் காப்புக்காடுகளில் ஏற்படும் தீ விபத்தை தடுக்கும் விதமாக 2 வகையான தீத்தடுப்பு கோடுகள் அமைக்கப்பட்டுள்ளன. அணைக்கரைப்பட்டி, அருங்குளம் மேற்கு, கிழக்குப்பகுதி, முத்துக்கோம்பை பகுதியில் 3 மீட்டர் அகலத்தில், 33 கீ.மீ தொலைவிலும், அகமலையின் மேற்குப் பகுதியில் உள்ள வரட்டாறு, போடி உலகுருட்டி உள்ளிட்ட பகுதிகளில் 6 மீட்டர் அகலத்தில், 38 கி.மீ., துாரம் தீத்தடுப்பு கோடுகள் அமைக்கப்பட்டுள்ளன.

Similar News