கிராம ஊராட்சிகளில் பணியாற்றும் தூய்மைப்பணியாளர்களுக்கு ஊதிய பாகுபாடுகளைக் களைய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி துப்புரவு பணியாளர்கள் உரிமை சங்கத்தினர் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கொரோனா தடுப்புப் பணி ஊக்கத்தொகை ரூ.15,000-யை உடனடியாக வழங்க வேண்டும்,கிராம ஊராட்சிகளில் பணியாற்றும் அனைத்து வகைத் தூய்மை பணியாளர்களையும், தூய்மைக் காவலர்களையும் முழு நேர கடைநிலை அரசு ஊழியராக அங்கீகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,கிராம ஊராட்சிகளில் பணியாற்றும் தூய்மைப்பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் உள்ள பாகுபாடுகளைக் களைந்து,அவரவர் பணிக்காலத்தின் அடிப்படையில் ஒரே மாதிரியான ஊதியத்தை நிர்ணயம் செய்ய வேண்டும் தமிழ்நாடு துப்புரவு பணியாளர்கள் உரிமை சங்கத்தினர் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இச்சங்க,மாநில தலைவர் அன்னமயில் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்