ஏஐடியுசி தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளர் சம்மேளனத்தினர் ஆர்ப்பாட்டம்.

ஏஐடியுசி தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளர் சம்மேளனத்தினர் ஆர்ப்பாட்டம்.;

Update: 2025-03-04 13:45 GMT
ஏஐடியுசி தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளர் சம்மேளனத்தினர் ஆர்ப்பாட்டம். நல வாரியத்தில் பதிவு செய்த தொழிலாளர்களுக்கு மாதம்தோறும் 3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏஐடியுசி தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளர் சம்மேளனத்தினர் விருதுநகர் தொழிலாளர் நலவாரிய அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர் தமிழ்நாடு உடலுழைப்பு நலவாரியத்தில் பதிவு செய்து 60 வயது பூர்த்தியான தொழிலாளர்களுக்கு விண்ணப்பித்த தேதியிலிருந்து ரூ.3,000/- ஓய்வூதியம் வழங்க வேண்டும், வீடற்ற நலவாரிய உறுப்பினர்களுக்கு வீடுகட்ட ரூ.5 லட்சம் மானியமாக வழங்க வேண்டும் நிலமில்லா தொழிலாளர்களுக்கு அடுக்கு மாடி குடியிருப்பு கட்டி வீடு வழங்க வேண்டும். கட்டுமான தொழிலாளர்களுக்கு கல்வி, திருமணம், மகப்பேறு, இயற்கை மரணம், விபத்து மரணம் போன்ற பணப் பலன்கள் வழங்குவது போன்று அனைத்து தொழிலாளர்களுக்கும் வழங்க வேண்டும், பதிவு, புதுப்பித்தல், கேட்பு மனுக்கள் உள்ளிட்டவற்றை நலவாரியமே இலவசமாக செய்து தரவேண்டும், என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏஐடியுசி தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளர் சம்மேளனத்தினர் விருதுநகர் நலவாரிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இச்சங்க மாவட்ட பொதுச்செயலாளர் முத்துமாரி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

Similar News