வளவனுார் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது.
அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது.;
வளவனுார் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது.கோவிலில், 246வது ஆண்டு பிரமோற்சவம், கடந்த 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 27ம் தேதி மயான கொள்ளை உற்சவம் நடந்தது.தேரோட்ட விழாவான நேற்று காலை 11:00 மணிக்கு அங்காளம்மனுக்கு அபிஷேக, ஆராதனை நடந்தது. தொடர்ந்து மூலவர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். மதியம் 2:30 மணிக்கு, தங்க கவச அலங்காரத்தில் உற்சவர் அங்காளம்மன் தேரில் எழுந்தருளினார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் வடம் பிடித்து இழுத்தனர். தேரோட்ட விழாவான நேற்று காலை 11:00 மணிக்கு அங்காளம்மனுக்கு அபிஷேக, ஆராதனை நடந்தது. தொடர்ந்து மூலவர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். மதியம் 2:30 மணிக்கு, தங்க கவச அலங்காரத்தில் உற்சவர் அங்காளம்மன் தேரில் எழுந்தருளினார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் வடம் பிடித்து இழுத்தனர்.