மூக்குபீறியில் கிராமப்புற தமிழ் மன்ற கூட்டம்
நாசரேத் அருகே மூக்குப்பீறியில் தமிழ் மன்றத்தின் சார்பாக மாதாந்திர கூட்டம் நடைபெற்றது.;
நாசரேத் அருகே மூக்குப்பீறியில் தமிழ் மன்றத்தின் சார்பாக மாதாந்திர கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கவிஞர் மூக்குப்பீரி ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் தேவதாசன் தலைமை தாங்கினார். தூத்துக்குடி சிறுகதை எழுத்தாளர் சாந்தி பிரபு சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டார். இதில் அவர் எழுதிய தேனீர் நேரம் சிறுகதை நூலை கவிஞர் தேவதாசன் திறனாய்வு செய்தார். சாந்தி பிரபு ஏற்புரை நிகழ்த்தினார். எழுத்தாளர் கண்ணகுமார விஸ்வரூபன், ஓய்வுபெற்ற வட்டாட்சியர் நாசரேத் நூலக வாசக வட்ட தலைவர் அய்யாகுட்டி சிறப்புரையாற்றினர். நாசரேத் நூலக வாசகர் வட்ட துணைத்தலைவர் ஆடிட்டர் கொம்பையா, கவிஞர் சிவா ஜான் பிரிட்டோ மந்திரம், வார்டு கவுன்சிலர் பொன்ராணி உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் அரிமா விவின் ஜெயக்குமார் நன்றி கூறினார்.