உத்தமபாளையம் பகுதியை சேர்ந்தவர் வேளாங்கண்ணி(38). இவர் நேற்று முன்தினம் தனது மகள் சத்யாவுடன் உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு அன்று இரவு மீண்டும் வீடு திரும்பி உள்ளார். அம்மாபட்டி விளக்கு அருகே இருவரும் நடந்து வந்த பொழுது அங்கு பைக்கில் வந்த ராஜ்குமார், சூர்யா ஆகியோர் இருவரையும் வழிமறித்து பெண் வன்கொடுமை செய்துள்ளனர். இது குறித்த புகாரில் போலீசார் ராஜ்குமாரை கைது செய்து சூர்யாவை தேடி வருகின்றனர்.