கும்பகோணத்தில் இன்று விவசாயிகள், மாற்றுத் திறனாளிகள் குறைதீர் கூட்டம்
குறைதீர் கூட்டம்;
கும்பகோணம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (மார்ச் 6) காலை 11 மணி அளவில் மாற்றுத் திறனாளிகள் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் கும்பகோணம் கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவித்துப் பயனடையலாம் இதேபோல, கும்பகோணம், சார் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாலை 3 மணிக்கு விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. இதில், அனைத்துத் துறை அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். எனவே, கும்பகோணம் கோட்ட விவசாயிகள் பங்கேற்று, தங்களை குறைகள் தெரிவித்து தீர்வுகாணலாம் என கும்பகோணம் சார் ஆட்சியர் ஹிருத்யா தெரிவித்துள்ளார்.