உத்திரமேரூரில் நீரில் மூழ்கி வாலிபர் பலி
உத்திரமேரூர் அருகே மீன் பிடிக்க சென்ற வாலிபர் நீரில் மூழ்கி பலி;
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த உள்ளாவூர் கிராமத்தை சேர்ந்த சம்பத் என்பவரின் மகன் முத்து, 27. இவர், நேற்று காலை தன் நண்பர்களுடன் திருமுக்கூடல் பாலாற்றுக்கு மீன் பிடிக்க சென்றார். அப்போது, முத்துக்கு திடீரென்று வலிப்பு வந்து தண்ணீரில் விழுந்துள்ளார். உடனிருந்த நண்பர்கள் அவரை காப்பாற்ற முயன்றுள்ளனர். இருப்பினும், முத்து நீரில் மூழ்கி இறந்தார். பின், அவரின் உடலை அங்கிருந்த பொதுமக்கள் மீட்டனர். தகவலறிந்த சாலவாக்கம் போலீசார் உடலை செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரிக்கின்றனர்.