யூனியன் அலுவலகம் முன்பு குழாய் பதிக்கும் பணிக்காக தோண்டப்பட்ட பேவர்பிளாக் கற்களை ஒப்பந்ததாரர் அனுமதி இன்றி எடுத்துச் செல்ல முயன்றதால் பரபரப்பு
யூனியன் அலுவலகம் முன்பு குழாய் பதிக்கும் பணிக்காக தோண்டப்பட்ட பேவர்பிளாக் கற்களை ஒப்பந்ததாரர் அனுமதி இன்றி எடுத்துச் செல்ல முயன்றதால் யூனியன் அலுவலக அதிகாரிகள் சத்தம் போட்டு தடுத்து நிறுத்தினர்*;
அருப்புக்கோட்டை யூனியன் அலுவலகம் முன்பு குழாய் பதிக்கும் பணிக்காக தோண்டப்பட்ட பேவர்பிளாக் கற்களை ஒப்பந்ததாரர் அனுமதி இன்றி எடுத்துச் செல்ல முயன்றதால் யூனியன் அலுவலக அதிகாரிகள் சத்தம் போட்டு தடுத்து நிறுத்தினர் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகராட்சி குடிநீர் தேவைக்காக திருப்புவனம் பகுதியில் இருந்து அருப்புக்கோட்டை வரை வைகை கூட்டுக் குடிநீர் திட்ட குழாய்கள் புதியதாக பதிக்கப்பட்டு வருகிறது. இதற்காக பாளையம்பட்டி ஊராட்சியில் அமைந்துள்ள யூனியன் அலுவலகம் முன்பு பேவர்பிளாக் கற்கள் பதிக்கப்பட்ட சாலைகள் தோண்டப்பட்டது. குழாய்கள் பதிக்கும் பணிகள் முடிவடைந்து பல நாட்கள் ஆகியும் சாலைகள் சீரமைக்கப்படாமல் இருந்தது. தோண்டப்பட்ட பேவர் பிளாக் கற்கள் யூனியன் அலுவலகம் முன்பு சாலை ஓரமாக குவித்து வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியத்தில் ஒப்பந்ததாரராக இருக்கும் மலைச்சாமி என்பவர் இன்று இந்த கற்களை எடுத்துச் செல்ல முயன்றுள்ளார். இதைக் கண்ட யூனியன் அலுவலக வட்டார வளர்ச்சி அலுவலர் காஜா மைதீன் பந்தே நவாஸ் பொறியாளர் அர்ஜுன் உள்ளிட்ட அதிகாரிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கற்களை எடுக்கக்கூடாது என ஒப்பந்தகாரை சத்தம் போட்டனர். மேலும் தோண்டப்பட்ட பகுதியில் புதிதாக கான்கிரீட் சாலை அமைக்க உள்ளதாகவும் அதற்காக இந்த கற்களை நகராட்சி அதிகாரிகள் கூறியதால் எடுத்ததாகவும் ஒப்பந்ததாரர் கூறிய நிலையில், ஏற்கனவே இருந்தபடியே இங்கு பேவர் பிளாக் சாலை மீண்டும் அமைக்க வேண்டும் என யூனியன் அலுவலகம் அதிகாரிகள் வலியுறுத்தி கூறியதால் ஒப்பந்ததாரர் அங்கிருந்து சென்றார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து நகராட்சி பொறியாளரிடம் கேட்டபோது, குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட இடத்தில் கான்கிரீட் சாலை அமைப்பதற்காகவே அங்கிருந்து பேவர் பிளாக் கற்களை எடுத்துச் செல்ல கூறினோம். ஆனால் அங்கு ஏற்கனவே இருந்தபடி பேவர் பிளாக் சாலையே மீண்டும் வேண்டுமென யூனியன் அலுவலக அதிகாரிகள் கூறியிருப்பதால் அப்பகுதியில் மீண்டும் பேவர் பிளாக் கற்கள் கொண்டு சாலை போடப்படும் என கூறினார்.