தபால் அலுவலகம் முற்றுகை போராட்டம்.

தபால் அலுவலகம் முற்றுகை போராட்டம்.;

Update: 2025-03-06 15:36 GMT
தபால் அலுவலகம் முற்றுகை போராட்டம். தேசிய கல்விக் கொள்கை என்ற பெயரில் தமிழ்நாட்டின் மீது இந்தி, சமஸ்கிருத மொழிகளை திணிக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் தவறான நடவடிக்கைகளை கண்டித்து அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் தபால் அலுவலகம் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. மும்மொழிக்கல்விக் கொள்கையை தமிழ்நாட்டின் மீது திணிக்கக் கூடாது, ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தில் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய கல்வி நிதியை உடனே வழங்க வேண்டும்,கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும்,கல்வியை காவி மயமாக்க முயற்சிக்கும் நடவடிக்கையை கை விட வேண்டும்,ஆர்.எஸ்.எஸ். கொள்கையான ஒரே நாடு ஒரே மொழி திட்டத்தை அமுல்படுத்த முயற்சிக்கும் முடிவை கைவிட வேண்டும்.பல்கலைக்கழகம்,கல்வி நிறுவனங்களில் ஆளுநரின் அதிகாரத்தை கை விட வேண்டும்,மாநில உரிமைகளை பறிக்கும் நடவடிக்கையை கை விட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் விருதுநகர் தேசபந்து மைதானம் தபால் நிலையம் முற்றுகை போராட்டம் நடத்தினர். அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் பகத்சிங் தலைமை வகித்தார். இந்த முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய குழு உறுப்பினரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான இராமசாமி மாவட்ட செயலாளரும் முன்னாள் எம்.பி.யுமான லிங்கம் 100 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

Similar News