ஆமை வேகத்தில் நடைபெறும் சாலை பணிகள் : வாகன ஓட்டிகள் அவதி
ஆமை வேகத்தில் நடைபெறும் சாலை பணிகள் வாகன ஓட்டிகள் அவதி;
திருத்தணி நகராட்சியில் ரூபாய் ஒரு கோடி மதிப்பீட்டில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ரவுண்டானா அமைக்கும் நெடுஞ்சாலைத்துறை போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை பணிகள் நடைபெறுகிறது என்ற எச்சரிக்கை பலகை எதுவும் இல்லாமல் பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் பணிகள் நடைபெறுகிறது சாலை நடுவில் இருக்கும் போக்குவரத்து சிக்னல் கம்பங்களை எடுப்பதில் கூட அஜாக்கிரதையாக செயல்படும் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர்கள் கண்டுகொள்ளாத போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகராட்சியில் பைபாஸ் ரோடு & சித்தூர் சாலை சந்திப்பு பகுதியில் ரூபாய் ஒரு கோடி மதிப்பீட்டில் புதிய ரவுண்டானா அமைத்து போக்குவரத்து நெரிசலை குறைக்க ஏற்பாடுகளை பணிகளை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஒப்பந்த பணிகள் மூலம் ஒப்பந்ததாரர்கள் மூலம் பணி மேற்கொண்டு வருகின்றனர் இந்த ஒப்பந்ததாரர்கள் மிகவும் அபாயகரமான முறையில் இந்த பகுதியில் பணிகளை மேற்கொண்டு வருவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர் இந்த பகுதியில் பணிகள் நடைபெறுகிறது என்று நான்கு வழிச்சாலையில் இருந்து வரும் வாகனங்களுக்கு அறிவிப்பு பலகை எதுவும் வைக்கவில்லை இதனால் இரவு நேரங்களில் மற்றும் பகல் வேலைகளில் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் எந்த நேரத்திலும் விபத்தை சந்திக்கக்கூடிய நிலையில் உள்ளது மேலும் போக்குவரத்துக்கு இந்த பணிகளுக்கு இடையூறாக உள்ள சிக்னல் கம்பங்களையும் நெடுஞ்சாலை துறை ஒப்பந்ததாரர்கள் அகற்றி வருகிறார்கள் ஆனால் அதிலும் அஜாக்கிரதியான முறையில் போக்குவரத்து போலீசாரை வைத்துக்கொண்டு பணிகளை செய்து வருகிறார்கள் இந்த பகுதியில் சாலை விரிவாக்கம் மற்றும் சாலை ரவுண்டானா பகுதி அமைக்கப்படும் பகுதி ஆட்கள் வேலை செய்கிறார்கள் என்ற எந்த ஒரு அறிவிப்பும் வைக்காததால் எந்த நேரத்திலும் விபத்தை சந்திக்க கூடிய பகுதியாக இது மாறி உள்ளது ஆமை வேகத்தில் நடைபெறும் இந்த பணியின் காரணமாக வாகன ஓட்டிகளுக்கு விபத்து ஏற்படும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு திருத்தணியில் சிண்டிகேட் முறையில் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்த பணிகளை ஒருவரை பல வேலைகளை செய்து வருவதால் எந்த வேலைகளையும் முழுமை பெறாமல் புதிய வேலைகளை தொடங்கி அப்படியே கிடப்பில் பூட்டப்பட்டுள்ளதால் இந்த வேலைகளும் ஆமை பாகத்தில் நடைபெறுகிறது என்று சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு மாவட்ட ஆட்சியர் விரைவாக நடவடிக்கை எடுத்து சாலை பணிகளில் மெத்தனம் காட்டாமல் விரைவாக பணிகள் செய்யவும் ஆமை வேகத்தில் நடைபெறும் பணிகளை விரைந்து முடிக்கவும் ஆபத்தான முறையில் நடைபெறும் பணிகளுக்கு ஆட்கள் வேலை செய்கிறார்கள் என்ற எச்சரிக்கை பலகையும் வாகன ஓட்டிகளுக்கு விபத்தை தடுக்கின்ற அளவிற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க மாவட்ட நிர்வாகம் முன் வரவேண்டும் என்று கோரிக்கை முன்வைத்துள்ளனர்