சமகல்வி எங்களின் உரிமை என்பதை உணர்த்தும் வகையில் பொது மக்களிடையே கையெழுத்து
அனைவரும் கல்வி கற்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர் ஆனால் தமிழக அரசு அதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது.;
நம் குழந்தைகள் அனைவருக்கும், ஏழை பணக்காரர் என்ற ஏற்றத்தாழ்வற்ற, தரமான கல்வி, சமமாகக் கிடைப்பதை உறுதி செய்வதற்காக, தமிழக பாஜக சார்பாகத் தொடங்கியுள்ள கையெழுத்து இயக்கத்தில் பங்குகொண்டு, puthiyakalvi.in என்ற இணையதள இணைப்பில் கையெழுத்திட்டு, தேசியக் கல்விக் கொள்கை பரிந்துரைக்கும் மும்மொழிக் கொள்கைக்கு அனைத்து பகுதிகளிலும் நடைபெற்று வருகிறது அதன் ஒரு பகுதியாக. பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் மத்திய அரசின் மும்மொழி கல்வி கொள்கையை ஆதரித்து சமகல்வி எங்களின் உரிமை என்பதை உணர்த்தும் வகையில் பொது மக்களிடையே கையெழுத்து வாங்கும் நிகழ்ச்சி பெரம்பலூர் மாவட்ட பாஜக தலைவர் முத்தமிழ் செல்வன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மாநில இணை பொருளாளர் சிவசுப்பிரமணியம் கலந்து கொண்டு பொது மக்களிடையே கையெழுத்து வாங்கும் நிகழ்ச்சியினை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியின் மாவட்ட துணை தலைவர் அசூர் சேகர்,நகர தலைவர் சுரேஷ் மாவட்ட செயலாளர் பானுமதி,மாவட்ட பொது செயலாளர்கள் ராமச்சந்திரன்,அருண் பிரசாந்த்,பெரம்பலூர் ஒன்றிய தலைவர் கார்த்திக்,மற்றும் கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்