மைக்ரோ பைனான்ஸ் மேலாளர் அவமானப்படுத்தியதால் பெண் தற்கொலை குற்றவாளியை கைது செய்ய ஆதித்தமிழர் கட்சி கோரிக்கை

மைக்ரோ பைனான்ஸ் மேலாளர் அவமானப்படுத்தியதால் பெண் தற்கொலை கொலை வழக்கு பதிந்து குற்றவாளியை கைது செய்ய ஆதித்தமிழர் கட்சி வலியுறுத்தி தாராபுரம் கோட்டாட்சியரிடம் மனு கொடுத்தனர்.;

Update: 2025-03-06 23:51 GMT
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே மைக்ரோ பைனான்ஸ் நிறுவன மேலாளர், கடன் வாங்கி செலுத்த முடியாத பெண்ணை மோசமான வார்த்தைகளால் அவமானப்படுத்தி, தற்கொலை செய்துகொள் என்று மிரட்டியதால்,மன முடைந்து அந்த பெண் தற்கொலை செய்து கொண்டார். இந்த பிரச்சனையில் மைக்ரோ பைனான்ஸ் நிறுவன மேலாளர் மீது கொலை வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்ய வேண்டும். பெண்ணின் கடனை தள்ளுபடி செய்வதுடன், அவரது குடும்பத்தாருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் ஆதித்தமிழர் கட்சியினர் திருப்பூர் மாவட்ட செயலாளர் ஆறுச்சாமி தலைமையில் தாராபுரம் கோட்டாட்சியர் பிலிக்ஸ் ராஜாவிடம் மனு கொடுத்தனர் அந்த மனுவில் தெரிவித்துள்ளதாவது. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டத்தில் அலங்கியம் ரோட்டில் ரிச்லைன் என்ற மைக்ரோ பைனான்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது இந்த நிறுவனத்தில் குண்டடம் ஒன்றியம் பேட்டை காளிபாளையத்தில் உள்ள பாபு என்பவரின் மனைவி மகேஸ்வரி (வயது 46) ரூ.1 லட்சம் கடன் பெற்றிருந்தார். மாதம் ரூ.6 ஆயிரம் தவணை கட்ட வேண்டும் இரண்டு மாதங்கள் கட்டியுள்ளார். வேலையில்லாத காரணத்தால் ஆயிரம் கட்டுவதாக கேட்டுக் கொண்டும், மைக்ரோ பைனான்ஸ் நிறுவன மேலாளர் ஒப்புக் கொள்ள மறுத்துவிட்டார். இந்நிலையில், கடந்த பிப்ரவரி 27-ஆம் தேதி மதியம் அந்த மைக்ரோ பைனான்ஸ் மேலாளர், மகேஸ்வரியிடம் கடனைக் கட்ட முடியாவிட்டால், தற்கொலை செய்து கொள் என்றும், வீட்டை ஜப்தி செய்து விடுவேன் என்றும் மிரட்டி உள்ளார். மேலும் கெட்ட வார்த்தைகள் பேசி, சாதியைச் சொல்லி இழிவுபடுத்தியும், சொல்ல முடியாத வார்த்தைகளால் அவர் துன்புறுத்தி உள்ளார். இதனால் மனமுடைந்த மகேஸ்வரி அன்று மதியம் மூன்று மணியளவில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். தாராபுரம் அரசு மருத்து வமனையில் அனுமதிக்கப்பட்ட பின், மேல்சிகிச் சைக்காக திருப்பூர் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். மகேஸ்வரியை தற்கொலைக்குத் தூண்டிய மைக்ரோ பைனான்ஸ் நிறுவன மேலாளர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்யாமல் தாமசெய்து வந்தனர். குறிப்பாக குண்டடம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சண்முகம் உரிய நடவ டிக்கை எடுக்க மறுத்துள்ளார். தற்கொலைக்கு தூண்டியவர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் மகேஸ்வரி வாங்கிய கடனை முழுமையாகத் தள்ளுபடி - செய்ய வேண்டும், வீட்டு பத்திரத்தை உடனடியாக திரும்பி வழங்க வேண்டும் என்று ஆதித்தமிழர் கட்சியினர் வலியுறுத்தினர். மகேஸ்வரி தற்கொலை முயற்சி என குண்டடம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்தனர். இதற்கிடையே மருத்துவ சிகிச்சை பலனளிக்காமல் செவ்வாயன்று மாலை மகேஸ்வரி உயிரிழந்தார் . இந்த சம்பவத்தில் உடனடியாக குண்டடம் காவல் நிலையத்தில், தற்கொலை வழக்கை மைக்ரோ பைனான்ஸ் நிறுவன மேலாளர் மீது கொலை வழக்காக பதிந்து அவரை கைது செய்ய வேண்டும்.முழு கடனைத் தள்ளுபடி செய்து,மகேஸ்வரி குடும்பத்தாருக்கு ரூ.10 லட் சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று அந்த மனதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களை அரசு கண்காணித்து ஏழை எளிய படிப்புஅறிவு இல்லாத மக்களிடத்தில் ஆங்கிலத்தில் காண்பித்து கையெழுத்து பெற்றுக் கொள்கின்றனர். அதனை தவிர்த்து முழுமையாக மைக்ரோ பைனான்ஸ் கடன் வழங்க என்னென்ன நிபந்தனைகள் என்பதை தமிழில் படித்துக் காண்பித்து அவர்களிடம் கையொப்பம் பெற வேண்டும் எனவும் தாராபுரத்தில் உள்ள ஐந்துக்கு மேற்பட்ட மைக்ரோ பைனான்ஸ் ஆய்வு செய்ய வேண்டும் எனவும் இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Similar News