நடந்து சென்ற வடமாநிலத்தவரை தாக்கி பணம் பறிப்பு : மூன்று பேர் கைது

நடந்து சென்ற வடமாநிலத்தவரை தாக்கி பணம் பறிப்பு : மூன்று பேர் கைது;

Update: 2025-03-07 08:51 GMT
மதுரவாயலில் நடந்து சென்ற வடமாநிலத்தவரை தாக்கி பணம் பறிப்பு : மூன்று திருடர்கள் கைது பூந்தமல்லி அருகே, மதுரவாயலில் உள்ள சீமாத்தம்மன் நகர் பகுதியில் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த முகேஷ் குமார் (34) தங்கி பணிபுரிந்து வருகிறார்.இவர் 2 நாள் முன்பு மதுரவாயல்- ஆலப்பாக்கம் சாலையில் நடந்து சென்ற அவரை மூன்று இளைஞர்கள் வழிமறித்து தாக்கியுள்ளனர். அத்துடன் முகேஷ் குமார் கையில் இருந்த 300 ரூபாயை பறித்துக்கொண்டு தப்பி சென்றனர். பாதிக்கப்பட்ட முகேஷ் குமார் மதுரவாயல் காவல் நிலையத்தில் முகேஷ் குமார் புகார் அளித்தார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரித்த போலீசார் வழிப்பறியில் ஈடுபட்ட மதுரவாயலை சேர்ந்த சங்கர் (எ)மிட்டா (22), சுமித் (19) மற்றும் சந்துரு (19) ஆகிய மூன்று இளைஞர்களை கைது செய்தனர். இதில் சங்கர் என்பவர் மீது ஏற்கனவே கொலை, கஞ்சா, செல்போன் பறிப்பு,திருட்டு உள்ளிட்ட 8 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. அவரிடம் இருந்து ஒரு செல்போனை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் மூன்று திருடர்களையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Similar News