கஞ்சா கடத்தி வந்த மேற்கு வங்க மாநில இளைஞர் கைது

பூந்தமல்லியில் கஞ்சா கடத்தி வந்த மேற்கு வங்க மாநில வாலிபர் கைது. 5 லட்சம் மதிப்பிலான 15 கிலோ கஞ்சா பறிமுதல்;

Update: 2025-03-07 08:54 GMT
பூந்தமல்லியில் கஞ்சா கடத்தி வந்த மேற்கு வங்க மாநில வாலிபர் கைது. 5 லட்சம் மதிப்பிலான 15 கிலோ கஞ்சா பறிமுதல். தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா, குட்கா போன்ற போதைப் பொருட்கள் விற்பனையை தடுப்பதற்கா ஆவடி காவல் ஆணையர் சங்கர் உத்தரவின் பேரில் போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.இந்த நிலையில் சென்னை அடுத்த பூந்தமல்லி பகுதியில் கஞ்சா எடுத்து செல்லப்படுவதாக வந்த தகவலையடுத்து பூந்தமல்லி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். அப்போது பூந்தமல்லி அடுத்த சென்னீர்குப்பம் மேம்பாலம் அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த வட மாநில வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர். விசாரணையில் அவரிடம் கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த நபரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்தனர். விசாரணையில் பிடிபட்ட நபர் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த பிரசண்ட பிஸ்வாஸ் (31), என்பதும் இவர் வெளிமாநிலங்களில் இருந்து கஞ்சாவை மொத்தமாக வாங்கி வந்து பூந்தமல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விற்பனை செய்ய வைத்திருந்தது தெரியவந்தது. அவரிடமிருந்து 15 கிலோ கஞ்சாவை பறிமுதல் போலீசார்செய்தனர். அதன் மதிப்பு சுமார் 5 லட்சம் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர் .இந்த சம்பவத்தில் வேறு யாருக்கெல்லாம் தொடர்புள்ளது என்பது குறித்தும் தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட போலீசார் அவரை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Similar News