சங்கரன்கோவில் அருகே கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி உயிருடன் மீட்பு

கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி உயிருடன் மீட்பு;

Update: 2025-03-07 09:48 GMT
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகில் உள்ள திரிகூடபுரத்தை சேர்ந்தவர் மாரியம்மாள் (74). இவர் அப்பகுதியில் உள்ள 50 ஆடி கிணற்றில் அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது எதிர்பாரவிதமாக கிணற்றில் தவறி விழுந்து உயிருக்கு போராடினார். இதை கண்ட பகுதி பொதுமக்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய அலுவலர் ரமேஷ் தலைமையிலான வீரர்கள் ராமா, குமார், சண்முகராஜன், சமுத்திரபாண்டி ஆகியோர் கொண்ட குழு கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டியை உயிருடன் மீட்டனர். இதுகுறித்து மூதாட்டியை காப்பாற்றும் வீடியோ வெளியாகியுள்ளது

Similar News