இளையான்குடி அருகே மக்கள் தொடர்பு முகாம்

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே முனைவென்றி கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெறவுள்ளது.;

Update: 2025-03-07 14:52 GMT
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே முனைவென்றி குரூப், முனைவென்றி கிராமத்தில், வருகின்ற 12.03.2025 (புதன்கிழமை) அன்று காலை 10.00 மணியளவில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெறவுள்ளது. மக்கள் தொடர்பு முகாமில், அரசுத்துறை அலுவலர்களை ஒருங்கிணைத்து அரசின் திட்டங்களை துறை சார்ந்த முதன்மை அலுவலர்களைக் கொண்டு, பொதுமக்களுக்கு திட்டங்கள் குறித்து எடுத்துரைத்து, தகுதிவாய்ந்த பயனாளிகளை பயன்பெறச் செய்வதே இம்மக்கள் தொடர்பு முகாமின் நோக்கமாகும். மேற்கண்ட கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் நடைபெறவுள்ள மக்கள் தொடர்பு முகாமில் கலந்து கொண்டு, அரசின் திட்டங்களை பெறுவதற்கான வழிமுறைகளை அறிந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.

Similar News