குடிநீர் மற்றும் தெருவிளக்குகள் தொடர்பான புகார்களுக்கு இலவச தொலைபேசி எண்
சிவகங்கை மாவட்டம், கிராம ஊராட்சிகளில் ஏற்படும் குடிநீர் மற்றும் தெருவிளக்குகள் தொடர்பான புகார்களுக்கு பொதுமக்கள் இலவச தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தீர்வு காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது;
சிவகங்கை மாவட்டம், அனைத்து ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராம ஊராட்சிகளின், உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் பதவிக்காலம் கடந்த 05-01-2025 அன்றுடன் முடிவடைந்ததைத் தொடர்ந்து, வட்டார வளர்ச்சி அலுவலர் நிலையில் தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கிராம ஊராட்சிகளில் ஏற்படும் குடிநீர் மற்றும் தெருவிளக்குகள் தொடர்பான புகார்களுக்கு ”1800 425 3025” என்ற இலவச தொலைபேசி எண்ணில், அலுவலக நேரங்களில் தொடர்பு கொண்டு தங்களது புகார்களுக்கு தீர்வு காணலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.