ஆவாரம்பட்டி பிளாஸ்டிக் நிறுவன குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான இயந்திரங்கள், பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் மினி சரக்கு வாகனம் தீயில் எரிந்து நாசமானது.*
ஆவாரம்பட்டி பிளாஸ்டிக் நிறுவன குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான இயந்திரங்கள், பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் மினி சரக்கு வாகனம் தீயில் எரிந்து நாசமானது.*;
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே ஆவாரம்பட்டி பிளாஸ்டிக் நிறுவன குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான இயந்திரங்கள், பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் மினி சரக்கு வாகனம் தீயில் எரிந்து நாசமானது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்த ராஜலிங்கம் மகன் சுரேஷ்(53). இவர் ராஜபாளையம் அருகே ஆவாரம்பட்டியில் ஸ்டாண்டர்ட் பாலிமர்ஸ் என்ற பெயரில் பிளாஸ்டிக் ஓவல் சாக்கு பைகள் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் இரவு 8 மணி அளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் நிறுவனத்தில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான இயந்திரங்கள், 10க்கும் மேற்பட்ட அறைகளில் இருப்பு வைக்கப்பட்டிருந்த மூலப் பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள், அங்கு நிறுத்தப்பட்டிருந்த மினி சரக்கு வாகனம் ஆகியவை தீயில் எரிந்து வீணானது. தகவலறிந்து வந்த ராஜபாளையம் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் தீயணைப்பு துறையினர் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். பிளாஸ்டிக் பொருட்கள் தீப்பிடித்து எரிந்ததால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. சேதமடைந்த பொருட்களின் மதிப்பு பல லட்சம் இருக்கும் எனவும், விசாரணைக்குப் பிறகு முழுமையான விவரம் தெரிய வரும் என அதிகாரிகள் தெரிவித்தனர். பிளாஸ்டிக் நிறுவனம் அருகே குப்பையை கொட்டி தீ வைத்து எரித்து வரும் நிலையில், அதிலிருந்து தீப்பொறி பட்டு தீ விபத்து ஏற்பட்டதா அல்லது மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா என்பது குறித்து ராஜபாளையம் வடக்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.