சங்கரன்கோவில் திமுக கட்சி நிர்வாகிகளுடன் அமைச்சர் ஆலோசனை

திமுக கட்சி நிர்வாகிகளுடன் அமைச்சர் ஆலோசனை;

Update: 2025-03-08 05:21 GMT
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ரயில்வே பீட்டர் சாலையில் அமைந்துள்ள தென்காசி திமுக வடக்கு மாவட்ட அலுவலகத்தில் வைத்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தலைமையில் திமுக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் மற்றும் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா, தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் ராணி ஸ்ரீகுமார், தலைமை செயற்குழு உறுப்பினர் தங்கவேலு, சங்கரன்கோவில் நகர செயலாளர் பிரகாஷ் உள்ளிட்ட ஏராளமான திமுக கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் பலர் கலந்து கொண்டனர்.

Similar News