வளவனூர் அருகே மாமியாரை தாக்கிய மருமகள் மீது வழக்கு பதிவு

போலீசார் வழக்கு பதிந்து விசாரணை;

Update: 2025-03-08 07:04 GMT
வளவனுார் அடுத்த ப.வில்லியனுார் பகுதியைச் சேர்ந்தவர் ராஜசேகரன் மகன் ராம்பிரசாத், 32; இவரது மனைவி நிவேஷா, 28; கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் நடந்தது.திருமணமான 20 நாட்களில், கருத்து வேறுபாடு காரணமாக நிவேஷா பிரிந்து, அவரது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.அதன் பிறகு, கடந்த 2ம் தேதி, இரு குடும்பத்தாரும் சமாதானம் பேசி நிவேஷாவை அழைத்து வந்தனர்.கணவர் வீட்டிற்கு வந்ததும், மாமியார், மருமகள் இடையே தகராறு ஏற்பட்டது.அப்போது, மாமியார் கோகிலாவை, 48; திட்டி, தாக்கி, வீட்டு உபயோக பொருட்களை, நிவேஷா மற்றும் அவரது தந்தை ஆகியோர் அடித்து உடைத்துள்ளனர்.இதுகுறித்து, கோகிலா கொடுத்த புகாரின் பேரில், நிவஷோ, அவரது தந்தை கண்ணன் ஆகியோர் மீது, வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News