சங்கரன்கோவிலில் காவல்துறையினர் த.வெ.க. கட்சி தொண்டர்களை கைது செய்ய முற்பட்டதால் பரபரப்பு.
காவல்துறையினர் த.வெ.க. கட்சி தொண்டர்களை கைது செய்ய முற்பட்டதால் பரபரப்பு.;
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்களும் கட்சியின் உறுப்பினர்களும் கலந்து கொண்டு பேரணி ஆரம்பித்தனர் பேரணி ஆரம்பித்த சிறிது நொடிகளில் காவல் ஆய்வாளர் மாதவன் தமிழக வெற்றி கழகத்தின் கட்சியின் தொண்டர்களை தேவையில்லாமல் பேசியதால் இருவருக்கும் வாக்குவாதம் முற்றியது இதில் தமிழக வெற்றி கழகத்தின் தொண்டர் ஆளுங்கட்சிக்கு ஒரு மாதிரியும் எங்களுக்கும் ஒரு மாதிரி செயல்படுகிறீர்கள் என கூறியதில் இருவருக்கும் வாக்குவாதம் உடனடியாக காவல் ஆய்வாளர் என்னை கைது செய்து விடுவேன் என சொல்லி அழைத்துக் கொண்டு வாகனத்தில் ஏற்ற முற்பட்ட போது சிறிது நேரம் அந்த பகுதியில் பரபரப்பான நிலை நிலவியது . பின்பு மாவட்டச் செயலாளர் மாரியப்பன் சமாதானப்படுத்தி பேரணி தொடர்ந்து நடைபெற்றுது இந்த பேரணியில் சுமார் 500க்கும் மேற்பட்ட பெண்கள் பதகை ஏந்தி இலவசம் வேண்டாம் பாதுகாப்பு வேண்டுமென பதகை. ஏந்தி பேரணி நடைபெற்றது தமிழக வெற்றி கழகத்தினருக்கும் காவல்துறையினர் வாக்குவாதம் பரபரப்பான நிலை சங்கரன்கோவில் பகுதியில் காணப்பட்டது