தென்காசியில் வட மாநில பெண் பலி - போலீசார் விசாரணை
வட மாநில பெண் பலி - போலீசார் விசாரணை;
தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகே அழகப்பபுரத்தில் கமல் என்பவருக்கு சொந்தமான செங்கல் சூலையில் மேற்கு வங்கத்தை சேர்ந்த ரீட்டா பகரி (35) என்ற பெண் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று மாலையில் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட போது உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது குறித்து தென்காசி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.