தோரணமலை கோவிலில் மகளிர் தின விழா கொண்டாட்டம்
தோரணமலை கோவிலில் மகளிர் தின விழா கொண்டாட்டம்;
தென்காசி மாவட்டம் கடையம் அருகே அமைந்துள்ள தோரணமலை ஸ்ரீ முருகன் கோவிலில் சர்வதேச மகளிர் தின விழா முன்னிட்டு இன்று கோவில் நிர்வாகம் சார்பில் பெண்களுக்கு மஞ்சள் குங்குமச்சிமிழ் மஞ்சள் கயிறு விபூதி குங்குமம் மற்றும் பூ அடங்கிய பிரசாதங்கள் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் செய்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.