தென்காசியில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி
மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி;
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவி வழங்கும் நிகழ்ச்சியினை தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து, மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் அவர்கள் தென்காசி மாவட்ட மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு கடனுதவித் தொகைக்கான காசோலையினை வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர், இ.ஆ.ப., அவர்கள், தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் ராணி ஸ்ரீகுமார் அவர்கள், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பழனிநாடார் அவர்கள், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ஈ.ராஜா அவர்கள், வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் மரு.தி.சதன்திருமலைக்குமார் அவர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் சீ.ஜெயச்சந்திரன் அவர்கள் கலந்து கொண்டனர்.