விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு அரசு வேலை வழங்க வேண்டும் என முற்றுகைப் போராட்டம்
சாலை விபத்தில் நான்கு பேர் பலி விபத்தில் இருந்த குடும்பத்திற்கு அரசு வேலை வழங்க கோரி மருத்துவமனை முற்றுகையிட்டு போராட்டம்.;
சாலை விபத்தில் நான்கு பேர் பலி விபத்தில் இருந்த குடும்பத்திற்கு அரசு வேலை வழங்க கோரி மருத்துவமனை முற்றுகையிட்டு போராட்டம். திருத்தணி அருகே அரசு பேருந்து மீது டிப்பர் லாரி மோதி ஒரே கிராமத்தைச் சேர்ந்த 4 பேர் பலி. திருத்தணி அரசு மருத்துவமனை முற்றுகையிட்டு இறந்தவரின் குடும்பத்திற்கு அரசு வேலையும் நிவாரணம் உயர்த்தி தரக்கோரி 500க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திருத்தணி அருகே நேற்று அரசு பேருந்தின் மீது அதிவேகமாக வந்த டிப்பர் லாரி மோதிய விபத்தில் ஒரே கிராமத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த நிலையில் தமிழக அரசு சார்பில் அறிவித்த மூன்று லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க அமைச்சர் நாசர் மாவட்ட கலெக்டர் குடும்பத்தினரை சந்தித்து வழங்க வந்தனர்.ஆனால் நிவாரணத்தை அக்குடும்பத்தினர் வாங்க மறுத்து தமிழக அரசு சார்பில் இறந்த குடும்பத்திற்கு ஒரு அரசு வேலையும் நிவாரணம் உயர்த்தி தர கோரிக்கை வைத்து நிவாரண நிதியை வாங்க மறுத்தனர். பின்னர் தமிழக அரசு சார்பில் அரசு வேலை வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று அமைச்சர் நாசர் மற்றும் மாவட்ட கலெக்டர் உறுதி அளித்தனர் பின்னர் நீண்ட நேரம் பேச்சு பேச்சுவார்த்தைக்கு பிறகு பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் நிவாரணம் வழங்கப்பட்டது. பின்னர் அதனைத் தொடர்ந்து அம்மையார் குப்பம் கிராமத்தைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் திருத்தணி அரசு பொது மருத்துவமனை முன்பு முற்றுகையிட்டு தமிழக அரசு உடனடியாக இறந்த குடும்பத்தினருக்கு ஒரு அரசு வேலையும் அதேபோல் நிவாரணம் உயர்த்தி தர வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளை வைத்து முற்றுகையிட்டு வருகின்றனர் இதனால் திருத்தணி அரசு மருத்துவமனையில் பரபரப்பு நிலவி வருகிறது.