நெற்பயிர் விளையும் விவசாய நிலத்தில் மணலை கொட்டி சாலை அமைக்க முயற்ச்சித்த அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் வலுக்கட்டாயமாக கைது*
நெற்பயிர் விளையும் விவசாய நிலத்தில் மணலை கொட்டி சாலை அமைக்க முயற்ச்சித்த அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் வலுக்கட்டாயமாக கைது*;
காரியாபட்டி அருகே நெற்பயிர் விளையும் விவசாய நிலத்தில் மணலை கொட்டி சாலை அமைக்க முயற்ச்சித்த அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் வலுக்கட்டாயமாக கைது விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள அரசகுளம் கிராமத்தில் சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். இந்த விவசாய நிலத்தில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்துள்ளனர். இப்பகுதியில் கடந்த 27 ஆண்டுகளுக்கு மேலாக விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் தற்பொழுது இவர்கள் விவசாய நிலத்தில் வண்டிப்பாதை இருப்பதாகக் கூறி இந்த விவசாய நிலத்தை தாண்டி உள்ள மணியம்பிள்ளை கிராமத்திற்கு வருவாய்த்துறை அதிகாரிகள் சாலை அமைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது. அந்த கிராமத்தில் பத்து வீடுகள் மட்டுமே உள்ளதாகவும், அவர்களுக்கு மாற்றுப்பாதை உள்ள நிலையில் அரசு நிதியை வீணாக்கி விவசாய நிலத்தை அழித்து அதிகாரிகள் சாலை அமைக்க முயற்சிப்பதாக விவசாயிகள் புகார் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று காரியாபட்டி வட்டாட்சியர் மாரீஸ்வரன் மற்றும் காரியாபட்டி இன்ஸ்பெக்டர் விஜய காண்டீபன் தலைமையிலான வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் 30க்கும் மேற்பட்டோர் இந்த விவசாய நிலத்தில் அரசு நிலம் எனக்கூறி அந்த நிலங்களில் கற்களை ஊன்றி மண்ணை கொட்டி சாலை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் அதிகாரிகளின் இந்த செயலுக்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தற்போது தான் அந்த நிலத்தில் நெல் விதைத்துள்ளதாகவும் இங்கு சாலை அமைக்க கூடாது என வலியுறுத்தி வட்டாட்சியர் உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகளை விவசாயிகள் முற்றுகையிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. விவசாயிகளின் கடும் எதிர்ப்பை மீறி அதிகாரிகள் அங்கு மணலை கொட்டி சாலை அமைக்க முயற்சி மேற்கொண்டனர். தொடர்ந்து விவசாயிகள் அதிகாரிகளை முற்றுகையிட்டதால் போலீசார் விவசாயிகளை வலுக்கட்டாயமாக தரதரவென இழுத்துச் சென்று கைது செய்தனர். இதனால் அரசகுளம் பகுதியில் பெரும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. பேட்டி : 1. வசந்தா 2. செளந்தர்யா